PulseNews
விளையாட்டு

AUS vs BAN: யாருகிட்ட...! பழி தீர்த்தது ஆஸ்திரேலியா.. வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்! சமனாகியது தொடர்!

வங்கதேசம் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் ஆடி வந்தது. இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் வங்கதேசம் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா ஃபயர் பவுலிங்:

இந்த நிலையில், இரு அணிகளும் மோதிய 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஸ்டார்க்கின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க இயலாத வங்கதேசம் 64 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது. ஸ்டார்க் அந்த இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியும் ரன் எடுக்கத் தடுமாறியது. இஸ்லாம் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட் வீழ்த்தியதால் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

146 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சைத் தொடங்கிய வங்கதேசத்தை மீண்டும் ஸ்டார்க் பந்துவீச்சில் மிரட்ட, கம்மின்ஸ், நாதன் லயனும் ஒத்துழைப்பு அளித்தனர். தமிம், ஷத்மான் இஸ்லாம், மோமினுல் ஹக் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாக கேப்டன் ஷான்டோ - ரஹீம் சற்று பொறுப்புடன் ஆடினார்கள்.

இன்னிங்ஸ் வெற்றி:

ஆனாலும், கேப்டன் ஷான்டோ 31 ரன்களுக்கு அவுட்டாகவும் ஆட்டம் ஆஸ்திரேலியா வசம் சென்றுவிட்டது. இறுதியில் 38.3 ஓவர்களில் 95 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட்டானது. இதனால், ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பழிக்கு பழி:

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி தோல்விக்கு பழி தீர்த்தது ஆஸ்திரேலியா. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக தொடரை வென்ற பெருமையை வங்கதேசம் படைத்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பை வங்கதேசம் தவறவிட்டுள்ளது.

வங்கதேசம் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தாலும், கம்மின்ஸ், ஸ்டார்க், ஸ்மித், லபுஷேனே, ட்ராவிஸ் ஹெட், ஹேசில்வுட் என பலமிகுந்த வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணியை முதல் போட்டியில் வீழ்த்தியதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
AUS vs BAN: யாருகிட்ட...! பழி தீர்த்தது ஆஸ்திரேலியா.. வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்! சமனாகியது தொடர்!
PulseNews சுருக்கம்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணிக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முதல் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தது.

தொடர்ந்து நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், ஸ்டார்க்கின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச அணி திணறியது. இதில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்த, வங்கதேச அணி வெறும் 64 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports