PulseNews
விளையாட்டு

வாஷிங்டனில் முதன்முறையாக நடைபெறுகிறது இண்டிகார் பந்தயம்.

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தலைநகர் வாஷிங்டனில் முதன்முறையாக, ஃப்ரீடம் 250 கிராண்ட் ப்ரீ எனப்படும் இண்டிகார் (IndyCar) பந்தயம் நடைபெற உள்ளது. திறந்த காக்பிட், ஒற்றை இருக்கை, பின்புற இன்ஜின் அமைப்புடன் லேசான எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள கார்கள் இண்டிகார் எனப்படுகின்றன. இம்மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி, அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வாஷிங்டனில், தேசிய கலைக்கூடம், தேசிய ஆவணக் காப்பகம், விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை உள்ளடக்கிய நேஷனல் மால் பகுதியில் முக்கியச் சாலைகள் வழியே சுமார் 1.7 மைல் நீளம் கொண்டதாக, அதிகபட்சம் 185 மைல் வேகத்தில் கார்கள் செல்லக்கூடிய வகையில் பந்தயப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வாஷிங்டனில் முதன்முறையாக நடைபெறுகிறது இண்டிகார் பந்தயம்.
PulseNews சுருக்கம்

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, தலைநகர் வாஷிங்டனில் முதல்முறையாக 'ஃப்ரீடம் 250 கிராண்ட் ப்ரீ' என்ற இண்டிகார் பந்தயம் நடைபெறவுள்ளது. இந்த மாதத்தின் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் பந்தயத்திற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இண்டிகார் பந்தயங்களில் பயன்படுத்தப்படும் கார்கள், எடை குறைந்த, ஒற்றை இருக்கை மற்றும் திறந்த காக்பிட் வசதியுடன் பின்புற இன்ஜின் அமைப்பு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. வாஷிங்டனின் முக்கிய இடங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இந்தப் போட்டி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports