ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ரபாடா விலகல்
ரபாடா காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகல்: தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக 6 வார ஓய்வு எடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை. Rabada ruled out of Australia ODI series: South Africa pacer Kagiso Rabada sidelined for six weeks with hand injury, to miss three-match ODI series and remains doubtful for upcoming Test matches.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா விலகியுள்ளார். அவரது கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
இந்த காயத்தினால் ரபாடா ஆறு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார். மேலும், அடுத்து வரவுள்ள டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.