சென்னையில் டிஎன்பிஎல் கிரிக்கெட்: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
சென்னை டிஎன்பிஎல் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை: சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை முதல் 28-ந்தேதி வரை நடைபெறும் டிஎன்பிஎல் 2-வது கட்ட ஆட்டங்களுக்கு ரூ.100 முதல் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.30 மணி முதல் கவுண்ட்டர் மற்றும் District.in மூலம் தொடக்கம். Chennai TNPL cricket tickets: Second phase TNPL T20 matches at MA Chidambaram Stadium from tomorrow to 28th, tickets from ₹100 available from 10.30 am at Chepauk counters and online via District.in.

சென்னையில் நடைபெறவுள்ள டிஎன்பிஎல் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.30 மணி முதல் தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகளை நேரில் கவுண்டர்களிலும், ஆன்லைன் மூலம் District.in இணையதளத்திலும் ரசிகர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை முதல் வரும் 28-ம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன. டிக்கெட்டுகளின் விலை 100 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.