அடுத்த ஆப்பு ஆரம்பம்... திமுகவை அதிரவைத்த அந்த ஒரு போன் கால்..! கெத்தாக வேலையை காட்டும் தவெக...!! ஆடிப்போன அறிவாலயம்!!!
தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், வட மாவட்டத்தைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த பேச்சுகள் அரசியல் வட்டாரங்களில் வேகமாக பரவி வருகின்றன. முன்னாள் அமைச்சரின் பின்னணி இருப்பதாக தகவல் இந்த அரசியல் நகர்வின் பின்னணியில் முன்னாள் திமுக அமைச்சர் ஒருவர் இருப்பதாகவும், அவரது தூண்டுதலின் பேரிலேயே எம்எல்ஏ இந்த முடிவை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தன் மீதான வழக்குகள் தொடர்பான அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்திலும் இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதையும் படிங்க: திரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சு.. பதிலடியால் பரபரப்பு.! தலைமைக்கு சென்ற தகவல் எம்எல்ஏவின் அரசியல் நகர்வு தொடர்பான தகவல் கட்சித் தலைமைக்கு சென்றதும், விவகாரத்தை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. நிலைமை மேலும் தீவிரமடையாமல் தடுக்க கட்சி நிர்வாகிகள் மூலம் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாலின் உத்தரவிட்டதாக தகவல் இதையடுத்து, கட்சித் தலைமை உடனடியாக தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், திமுக எம்எல்ஏ தொடர்பான இந்த தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. இருப்பினும், அவர் உண்மையில் பதவியை ராஜினாமா செய்து தவெக வில் இணைய உள்ளாரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. இதையும் படிங்க: BREAKING: வாரி வழங்கிய பதவியால் தவெக- வில் நடக்கும் தள்ளுமுள்ளு! உடனே கூட்டத்தை கூட்டுங்க.... பரபரப்பில் அரசியல் களம்..!!!

தமிழக அரசியல் களத்தில் வட மாவட்டத்தைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த திடீர் அரசியல் நகர்வின் பின்னணியில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் செயல்படுவதாகவும், அவரது தூண்டுதலின் பேரிலேயே எம்எல்ஏ இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்ததற்கு, அவர் மீதான வழக்குகள் மற்றும் முன்னாள் அமைச்சரின் அரசியல் பின்னணி ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.