சாதித்த பிரஞ்யானந்தா.. கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்!
Praggnanandhaa Grand Chess Tour : நடப்புச் சாம்பியனான ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. கிளாசிக்கல் ஆட்டங்களுக்குப் பிறகு, பிரக்ஞானந்தா 3-9 என்ற கணக்கில் படுமோசமாகப் பின்தங்கியிருந்தார். அவரால் பட்டத்தை வெல்ல வாய்ப்பே இல்லை என்று அனைவரும் நினைத்தபோது, அந்தத் தமிழக வீரர் எதிர்பாராதவிதமாக மீண்டு வந்தார்.

கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தமிழக வீரர் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். நடப்பு சாம்பியனான ஃபேபியானோ கருவானாவுக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் அவர் இந்த வெற்றியை ஈட்டியுள்ளார்.
கிளாசிக்கல் ஆட்டங்களின் முடிவில் பிரக்ஞானந்தா 3-9 என்ற கணக்கில் பின்தங்கியிருந்ததால், அவர் தோல்வியடைவார் என்று கருதப்பட்டது. ஆனால், அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக அபாரமாக மீண்டு வந்து, போராடி இந்த வரலாற்று வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார்.