உலகக் கோப்பை பெண்கள் ஆக்கி: 16 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற அர்ஜென்டினா
உலகக் கோப்பை பெண்கள் ஆக்கி: 16 ஆண்டுகள் காத்திருந்த அர்ஜென்டினா, பெனால்டி ஷூட்-அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி 3வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றது. Women’s Hockey World Cup: Argentina beat top-ranked Netherlands 3-1 on penalties after 1-1 draw to claim their third world title after 16-year wait.

மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில், நெதர்லாந்தை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்ததால், பெனால்டி முறையில் 3-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
கடந்த 16 ஆண்டுகளாக உலகக் கோப்பைக்காக காத்திருந்த அர்ஜென்டினாவுக்கு இது மூன்றாவது உலக சாம்பியன் பட்டமாகும். தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நெதர்லாந்தை வீழ்த்தி இந்த வெற்றியை அந்த அணி பதிவு செய்துள்ளது.