PulseNews
விளையாட்டு

இலங்கை டெஸ்ட் டிரா ஆகப் போகிறதா? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை: காலி மைதானத்தில் அடுத்தடுத்து மழைக்கு வாய்ப்பு

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் ஒரு அங்கமாக இருப்பதால், இரு அணிகளுக்குமே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணி இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்த இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது. அதேவேளையில், கடந்த நவம்பர் மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை 0-2 என இழந்திருந்தது. அதன்பின் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு களமிறங்கியுள்ள இந்திய அணி, WTC புள்ளிகள் பட்டியலில் 4 வெற்றி, 4 தோல்வி, 1 டிரா என 48.15 சதவீத புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற வேண்டுமானால் எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இலங்கைத் தொடருக்குப் பின், இந்திய அணி நியூஸிலாந்து சென்று 2 டெஸ்ட் போட்டிகளிலும், பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சொந்த மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. காலே டெஸ்டில் மழையின் குறுக்கீடு : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள ஆகஸ்ட் மாதத்தில், காலே மைதானத்தில் போட்டியை நடத்துவது சவாலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் முகநூல் பக்கத்த்தில் வெளியிட்ட பதிவில், ”திங்கட்கிழமை முதல் இங்கு மழை மேலும் தீவிரமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை காரணமாக ஆட்டம் தொடர்ந்து பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே பல ஓவர்கள் மழையால் வீணாகியுள்ள நிலையில், இந்த போட்டியில் ஒரு தெளிவான முடிவு கிடைப்பது மிகவும் கடினமாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடையவே அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அற்புதமாகச் செயல்பட்டு, இலங்கை அணியை ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 150 ரன்களுக்குள் சுருட்டினால் மட்டுமே இந்தியாவால் வெற்றிக்கான நேரத்தைப் பெற முடியும். இல்லையெனில், இந்த டெஸ்ட் போட்டியில் அணியைக் காட்டிலும் வானிலையே வெற்றி பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இலங்கை டெஸ்ட் டிரா ஆகப் போகிறதா? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை: காலி மைதானத்தில் அடுத்தடுத்து மழைக்கு வாய்ப்பு
PulseNews சுருக்கம்

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியான இந்தச் சுற்றுப்பயணம் இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், காலி மைதானத்தில் அடுத்தடுத்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். இதனால் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிய வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports