தேசிய அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 வயதுடைய ரோஹன்
தேசிய டெனிஸ் போட்டியில் யாழ் ஃபிளமிங்கோஸ் சாதிக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் டென்னிஸ் விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) ஏற்பாடு செய்யும் இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL) போட்டியில் பங்கேற்கும் எட்டு நகர அணிகளில் ஒன்றான யாழ் ஃபிளமிங்கோஸ் (Jaffna Flamingos) அணியின் உத்தியோகபூர்வ அறிமுக விழா நேற்று (20.08.2026) வியாழக்கிழமை மாலை 04.00 மணிக்கு தனியார் ஹோட்டல் ஒன்ற...

இலங்கை டென்னிஸ் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டென்னிஸ் பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்கும் 'யாழ் ஃபிளமிங்கோஸ்' அணியின் அறிமுக விழா நேற்று வியாழக்கிழமை மாலை தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 10 வயதுடைய ரோகன் இந்த தேசிய அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்த அணியின் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் ஃபிளமிங்கோஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகளைத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தின் டென்னிஸ் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் எட்டு நகர அணிகளில் ஒன்றாக இந்த அணி களமிறங்குகிறது.