சாரன்ஷ் ஜெயின் யார்? இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் அறிமுகமாகும் 33 வயது வீரர்!
முதல் டெஸ்ட் போட்டியில் மானவ் சுதார் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நிலையில், குல்தீப் யாதவ் 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். இதனால் கொழும்பு டெஸ்டில் அவருக்கு பதிலாக சாராண்ஷ் ஜெயின் சேர்க்கப்படலாம். முதல்தர கிரிக்கெட்டில் 188 விக்கெட்டுகள் மற்றும் 2,223 ரன்கள் குவித்துள்ள சாராண்ஷ், ரஞ்சி கோப்பையில் சிறந்த ஆல்ரவுண்டருக்கான லாலா அமர்நாத் விருதையும் வென்றவர் ஆவார்.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 33 வயதான சாராண்ஷ் ஜெயின் இந்திய அணியில் அறிமுக வீரராகச் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த நிலையில், அந்த இடத்தில் சாராண்ஷ் ஜெயினை அணியில் சேர்க்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 188 விக்கெட்டுகளை வீழ்த்தி 2,223 ரன்களைக் குவித்துள்ள சாராண்ஷ் ஜெயின், ரஞ்சி கோப்பை தொடரில் சிறந்த ஆல்ரவுண்டருக்கான லாலா அமர்நாத் விருதையும் வென்றுள்ளார். முதல் டெஸ்டில் மானவ் சுதார் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாகச் செயல்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.