PulseNews
விளையாட்டு

மகளிர் கிரிக்கெட்டில் ஆட இந்திய திருநங்கைக்கு அனுமதி: தெ.ஆ வீராங்கனை எதிர்ப்பு

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகனும், கிரிக்கெட் வீரருமான ஆர்யன் பங்கர், உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வந்தார். இவர், மும்பை 16 வயதுக்குள்பட்டோர் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், 19 வயதுக்குள்பட்டோர் போட்டிகளில் புதுச்சேரி அணிக்காகவும், 23 வயதுக்குள்பட்டோர் போட்டிகளில் மும்பை அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு திருநங்கையாக மாறப்போவதாக அறிவித்து அதிர்ச்சியளித்த அவர், ஹார்மோன் மாற்று சிகிச்சையை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தாய்லாந்தில் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை மூலமாக தான் முற்றிலும் பெண்ணாக மாற்றிவிட்டதாகத் தெரிவித்திருந்தார். இடக்கை பேட்டரான அனயா பங்கர், அவ்வப்போது தனது கிரிக்கெட் விளையாடும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். மேலும், மும்பையின் வீரர்கள் சர்ப்ராஸ் கான், முஷீர்கான் உள்ளிட்டோருடன் விளையாடியுள்ள அனயா பங்கர் (ஆர்யன்) மகளிர் போட்டிகளாக பிக்-பாஷ் தொடரில் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்காக அவருக்கு டெஸ்டோஸ்டிரோன் சோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தகவல்களின் படி, திருநங்கையாக மாறிய வீரர் கிரிக்கெட் விளையாடத் தகுதிபெற, டெஸ்டோஸ்டிரோன் அளவு, 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்கும் (நானோமோல்கள்/லிட்டர்) குறைவாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்த அளவிற்கு மேலிருந்தால், கடந்த 2023-ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவின்படி, மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதில் தடைவிதிக்கப்படும். இந்நிலையில், அனயா பங்கருக்கு நடத்தப்பட்ட சோதனையில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறிப்பிட்ட அளவைவிட குறைவாக இருப்பதால் அவருக்கு ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அவர் அடுத்தாண்டு (2027) மார்ச்சில் நடைபெறும் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுக்கு அளித்த பேட்டியில் அனயா பங்கார், "நான் மீண்டும் விளையாட முடியும் என்பதை என்னால் உண்மையிலேயே நம்ப முடியவில்லை. 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' (Cricket Australia) அமைப்பின் முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளால் இது சாத்தியமாகியுள்ளது; குறிப்பாக, திருநங்கைகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதில் நியாயம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை இக்கொள்கைகள் முன்னிறுத்துகின்றன. இது எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு முக்கியமான மைல்கல்; ஏனெனில், விளையாட்டு அல்லது பாலின மாற்றம் (transition) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தால், பலர் விளையாட்டில் ஈடுபட விரும்பி இருந்தும் அதைச் செய்யாமல் உள்ளனர்," என்று அவர் தெரிவித்து இருந்தார். பாலின உறுதிப்படுத்தல் அறுவை சிகிச்சையிலிருந்து (gender-affirming surgery) இன்னும் மீண்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவில் தான் விளையாடுவதற்கான ஒரு கிளப்பைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எதிர்ப்பு இந்த நிலையில், திருநங்கையாக மாறிய அனயா பங்கார், மகளிர் கிரிக்கெட்டில் மீண்டும் பங்கேற்க அனுமதிக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் முடிவை, தென் ஆப்பிரிக்காவின் மூத்த ஆல்-ரவுண்டர் வீராங்கனை மரிசான் காப் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "முற்றிலும் அபத்தமானது, இதை அனுமதிக்கக் கூடாது," என்று பல்வேறு வடிவங்களில் 280-க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள மரிசான் கேப் பதிவிட்டுள்ளார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மகளிர் கிரிக்கெட்டில் ஆட இந்திய திருநங்கைக்கு அனுமதி: தெ.ஆ வீராங்கனை எதிர்ப்பு
PulseNews சுருக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகனான ஆர்யன் பங்கர், பல்வேறு வயது வரம்பு பிரிவுகளில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகளுக்காக விளையாடியுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஹார்மோன் மாற்று சிகிச்சை மூலம் தான் திருநங்கையாக மாறப்போவதாக அவர் அறிவித்தது விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு தென்னாப்பிரிக்க வீராங்கனை ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக, ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொண்ட பிறகு ஆர்யன் பங்கர் தனது பெயரை தாய் என மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports