ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்: சாம்பியன் பட்டம் வென்ற சென்னை புல்ஸ்
கோவை மாவட்டம், மோலப்பாளையத்தில் ஆகஸ்ட் 28"ஆம் தேதி தொடங்கிய தேசிய அளவிலான ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் குதிரையேற்ற போட்டி, விறுவிறுப்பான போட்டிகளுடன் நிறைவு பெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன. 100 செ.மீ., 110 செ.மீ. மற்றும் 120 செ.மீ. என மூன்று பிரிவுகளில் ஷோ ஜம்பிங் போட்டிகள் நடைபெற்றன. இறுதி போட்டியில் தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர், சத்தியபாமா, பிரபல திரைப்பட நடிகர்கள் ஆர்யா மற்றும் ஷாம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பார்வையிட்டனர். ஐந்து அணிகளைச் சேர்ந்த குதிரையேற்ற வீரர்கள், தங்களது திறமையையும் குதிரைகளுடனான ஒருங்கிணைப்பையும் வெளிப்படுத்தி, பல்வேறு சவாலான தடைகளைத் தாண்டி சிறப்பாக போட்டியிட்டனர். இறுதிப் போட்டிகளின் முடிவில், 311 புள்ளிகளுடன் சென்னை புல்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்து, ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது.பெங்களூரு நைட்ஸ் அணி 291 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும்,கோல்கொண்டா சார்ஜர்ஸ் அணி 286 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்து ரொக்கப் பரிசையும் தட்டிச் சென்றது. செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

கோவை மாவட்டம் மோப்பபாளையத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கிய தேசிய அளவிலான ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் குதிரையேற்றப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவுற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்தத் தொடரில் 100 செ.மீ., 110 செ.மீ. மற்றும் 120 செ.மீ. ஆகிய பிரிவுகளில் ஷோ ஜம்பிங் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதிப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட சென்னை புல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.