IND vs SL: தோள்பட்டையில் பெரிய கட்டுடன் ரிஷப் பண்ட்.. வெளியான புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Rishabh Pant Injury: பேட்டிங் செய்த பிறகு, ரிஷப் பண்ட்டின் தோள்பட்டைப் பிரச்சனை மோசமடைந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய அணி நிர்வாகம் அவரைக் களமிறக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் அவருக்குப் பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் செய்தார். அவரது காயம் குறித்து, இந்திய பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல், மருத்துவக் குழு பண்ட்டின் காயத்தைக் கண்காணித்து வருவதாகத் தெளிவுபடுத்தினார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, பேட்டிங் செய்த பிறகு ரிஷப் பண்டிற்கு தோள்பட்டை வலி அதிகரித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் களமிறக்கப்படவில்லை, அவருக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராகச் செயல்பட்டார்.
பண்டின் தோள்பட்டையில் பெரிய கட்டுடன் இருக்கும் புகைப்படம் வெளியான நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்துப் பேசிய இந்திய பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல், மருத்துவக் குழுவினர் அவரது காயத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.