பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League

இந்தியாவில் பிரீமியர் லீக் -ன் பார்வையாளர் தளம் எவ்வாறு குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. BARC தரவுகள் மற்றும் Nielsen-ன் நுகர்வோர் ஆய்வை அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கை, இந்தியாவின் மதிப்புமிக்க விளையாட்டு ரசிகர் சமூகங்களில் ஒன்றாக பிரீமியர் லீக் எவ்வாறு உருவெடுத்துள்ளது என்பதை ஆராய்கிறது.

9.04 பில்லியன் நிமிடங்கள்

2025/26 சீசனில், இந்தியாவில் ஜியோஸ்டார் நெட்வொர்க் முழுவதும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் 9.04 பில்லியன் நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளன. லீனியர் டிவி -யில் (LTV) பதிவான பிரீமியர் லீக் பார்வை நேரம், சாம்பியன்ஸ் லீக்-ஐ விட 3 மடங்கு அதிகமாக இருந்தது. ஜியோஸ்டார் -ன் லீனியர் டிவி மற்றும் டிஜிட்டல் திரைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பார்வையாளர் சென்றடைவு கடந்த ஐந்து ஆண்டுகளில் 2.4 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் பிரீமியர் லீக் -க்கு தற்போது 144.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

பிரீமியர் லீக் -ன் வளர்ச்சி நகர்ப்புற சந்தைகளைத் தாண்டி விரிவடைந்துள்ளதையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பார்வையாளர்களில் சுமார் 12% பங்களித்த ராஜஸ்தான், பீகார்/ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், தற்போது கிட்டத்தட்ட 25% பங்களிக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இம்மாநிலங்களின் பார்வையாளர் எண்ணிக்கை 200%க்கும் அதிகமாக வளர்ந்துள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள், மொபைல் மற்றும் வெப் பார்வையில் சுமார் 55% பங்களிப்பதுடன், கனெக்டட் டிவி (CTV) பார்வையில் சுமார் 63% பங்களிக்கின்றன. இது மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிக்கும் பார்வையாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவில் பிரீமியர் லீக் ரசிகர்களின் வளர்ச்சிக்கு சர்வதேச கால்பந்து போட்டிகளும் முக்கிய ஊக்கியாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. பிரீமியர் லீக் -ன் முன்னணி வீரர்கள் தங்கள் தேசிய அணிகளுக்காக விளையாடுவதை ரசிகர்கள் பார்க்கும்போது, அந்த வீரர்கள் மீதான பரிச்சயம் அதிகரிக்கிறது. இந்த ஆர்வம் பின்னர் கிளப் சீசனுக்கும் தொடர்கிறது. இதன் மூலம் அதிக ஈடுபாடும் தொடர்ந்து வலுவான பார்வையாளர்களும் உருவாகின்றனர். 2022 FIFA World Cup Qatar போட்டியைத் தொடர்ந்து வந்த பிரீமியர் லீக் சீசனில், இந்தியாவில் பார்வையாளர் எண்ணிக்கை 58% அதிகரித்தது, அதன் பின்னரும் தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது.

பிரீமியர் லீக் ரசிகர்களின் பார்வையாளர் சுயவிவரம் மற்றும் நடத்தை குறித்து விரிவாகப் புரிந்துகொள்ள மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், அவர்கள் இந்தியாவின் மிகவும் பிரீமியம் நுகர்வோர் பிரிவுகளில் ஒன்றாக இருப்பது தெரியவந்துள்ளது. 70% பேர் மாதந்தோறும் ₹40,000-க்கும் அதிகமான கிரெடிட் கார்டு பில்களைச் செலுத்துகின்றனர்; 67% பேர் 751 அல்லது அதற்கு மேற்பட்ட CIBIL மதிப்பெண்ணைக் கொண்டுள்ளனர்; மேலும் 87% பேர் OTT, இசை மற்றும் விளையாட்டு தளங்களின் கட்டண சந்தாதாரர்களாக உள்ளனர். இது தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பார்வையாளர்களிடையே வலுவான வாங்கும் திறனை வெளிப்படுத்துகிறது.

ஆகஸ்ட் முதல் மே வரை நடைபெறும் ஒரு சீசனில் 380 போட்டிகள் இடம்பெறும் நிலையில், ரசிகர்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளது. அவர்கள் நேரலைப் போட்டிகள், highlights ஆகியவற்றைப் பார்ப்பதுடன், சமூக ஊடக விவாதங்களிலும் பங்கேற்கின்றனர். நள்ளிரவுக்குப் பிந்தைய நேரலைப் பார்வை, ரசிகர்களின் வாராந்திர பார்வைப் பழக்கத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மொத்த பார்வை நேரத்தில் 27% இரவு 12:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை பதிவாகியுள்ளது.

பிரீமியர் லீக் Chief Media Officer Paul Molnar கூறுகையில்:

“இந்தியா பிரீமியர் லீக் -ன் மிகவும் ஆர்வமிக்க மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ரசிகர் தளங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இந்த ரசிகர் தளம் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

“முன்னெப்போதையும் விட அதிகமான இந்திய ரசிகர்கள் பிரீமியர் லீக் , அதன் கிளப்புகள் மற்றும் வீரர்களுடன் இணைந்திருப்பதையும், அவர்கள் பார்க்கும் பிரீமியர் லீக் கால்பந்தின் அளவிலும் இது பிரதிபலிப்பதையும் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மற்றொரு உற்சாகமான சீசனை எதிர்நோக்கும் நிலையில், இந்திய ரசிகர்களை பிரீமியர் லீக் -க்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு வரவும், சிறந்த பார்வை அனுபவத்தை வழங்கவும் ஜியோஸ்டார் உடன் தொடர்ந்து இணைந்து செயல்பட உறுதியாக உள்ளோம்.”

ஜியோஸ்டார் -ன் Head of Sales, Sports, Anup Govindan கூறுகையில்:

“இந்தியாவில் பிரீமியர் லீக் -ன் கதை இன்று ஒரு ஒருங்கிணைந்த வளர்ச்சியின் கதையாக உள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக கால்பந்து மாறியுள்ளது. இந்த அறிக்கை, பார்வையாளர் வளர்ச்சி என்பது எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமல்லாமல், அவர்களின் வாங்கும் திறன், ஈடுபாடு மற்றும் பன்முகத்தன்மையிலும் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. நேரலைப் போட்டிகளுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களைத் தேடும் இளம் தலைமுறை மற்றும் மெட்ரோ, மெட்ரோ அல்லாத நகரங்களைச் சேர்ந்த பார்வையாளர்களே அடுத்த கட்ட வளர்ச்சியை முன்னெடுப்பார்கள்.”

Nielsen-ன் India Lead - Audience Measurement, Hemant Kewalya கூறுகையில்:

“Nielsen-ன் உலகளாவிய அறிக்கையின் அடிப்படையில், பெரியவர்களிடையே இந்தியாவின் இரண்டாவது மிகவும் பிரபலமான விளையாட்டு கால்பந்து ஆகும்; கிரிக்கெட்டுக்கு அடுத்த நிலையில் அது உள்ளது. பார்வையாளர்களின் ஆர்வமும் நடத்தையும் தொடர்ந்து மாறிவரும் நிலையில், இந்த ஆய்வு பிரீமியர் லீக் பார்வையாளர்கள் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் தளங்களில் எவ்வாறு விளையாட்டுடன் ஈடுபடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இது விளையாட்டு மீதான ஆர்வத்தையும் பார்வைப் பழக்கங்களையும் வெளிப்படுத்துவதுடன், ஊடகச் சூழலில் மேலும் தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது.”

பிரீமியர் லீக் பற்றி

பிரீமியர் லீக் உலகின் மிகவும் போட்டி நிறைந்த மற்றும் ஈர்க்கக்கூடிய கால்பந்து போட்டிகளில் சிலவற்றை வழங்குகிறது. இந்தப் போட்டியின் சக்தி மற்றும் பிரபலத்தைப் பயன்படுத்தி, பிரீமியர் லீக் மற்றும் அதன் கிளப்புகள் இங்கிலாந்திலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், சமூகங்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு ஊக்கமளிக்கின்றன. அனைத்து பின்னணிகளையும் சேர்ந்த மக்களை பிரீமியர் லீக் ஒன்றிணைக்கிறது. இது அனைவருக்கும், எல்லா இடங்களிலும் கிடைக்கும் ஒரு போட்டியாகும். 189 நாடுகளில் 1.2 பில்லியன் வீடுகளில் பிரீமியர் லீக் பார்க்கக் கிடைக்கிறது.

இந்தியாவில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பி.ஏ.ஆர்.சி (BARC) தரவுகள் மற்றும் நீல்சன் (Nielsen) நுகர்வோர் ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய விளையாட்டு ரசிகர் சமூகங்களில் ஒன்றாக பிரீமியர் லீக் உருவெடுத்துள்ளதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. 2025/26 சீசனில், ஜியோஸ்டார் நெட்வொர்க் வாயிலாக மட்டும் 9.04 பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தை இந்தப் போட்டிகள் பதிவு செய்துள்ளன.