உலகக் கோப்பை நேரடி தகுதியை பெற்ற ஆப்கானிஸ்தான்; மீண்டும் தடுமாறிய மே.இ. தீவுகள்!
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நேரடியாக விளையாடும் தகுதியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பைக்கான நேரடி தகுதியை உறுதி செய்த நிலையில், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் வெற்றியால், 2027 உலகக் கோப்பையில் நேரடியாக விளையாடும் வாய்ப்பை மேற்கு இந்தியத் தீவுகள் அணி இழந்துள்ளது. தகுதிச் சுற்று மூலம் மட்டுமே வாய்ப்பு இனி உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டுமெனில், மேற்கு இந்தியத் தீவுகள் அணி தகுதிச் சுற்றில் பங்கேற்று, அதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே 2027 உலகக் கோப்பையில் அந்த அணியால் களமிறங்க முடியும். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இது தொடர்ந்து மூன்றாவது உலகக் கோப்பைக்கான பின்னடைவாக அமைந்துள்ளது. 2019 மற்றும் 2023 உலகக் கோப்பை தொடர்களைத் தொடர்ந்து, 2027 உலகக் கோப்பையிலும் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை அந்த அணி இழந்துள்ளது. ஒருகாலத்தில் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, தற்போது உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்கே தகுதிச் சுற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →