ICC Ranking: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை.. டாப் 10க்குள் முன்னேறிய ரிஷப் பண்ட்!
Rishabh Pant ICC Ranking: ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காகத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இலங்கை தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் முறையே 39 மற்றும் 66 ரன்கள் எடுத்தார். இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி, 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களின் உதவியுடன் 63 ரன்கள் எடுத்தார்.

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், இந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 39 மற்றும் 66 ரன்களைப் பதிவு செய்த பண்ட், இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடினார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி அவர் 63 ரன்களைக் குவித்தார்.