IND vs SL: முடியப்போகும் முதல் இந்தியா – இலங்கை டெஸ்ட் போட்டி.. வெற்றி-தோல்விக்கு பிறகு புள்ளி பட்டியலில் என்ன மாற்றம் நிகழும்?
World Test Championship 2027: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி அட்டவணையில், ஆஸ்திரேலியா 77.78 சதவீத வெற்றி விகிதத்துடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா 75 சதவீத வெற்றி விகிதத்துடன் 2ம் இடத்திலும், நியூசிலாந்து 72.22 சதவீத வெற்றி விகிதத்துடன் 3ம் இடத்திலும், வங்கதேசம் 66.67 சதவீத வெற்றி விகிதத்துடன் 4ம் இடத்திலும் உள்ளன.

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த போட்டியின் முடிவால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா 77.78 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா 75 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து 72.22 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், வங்கதேசம் 66.67 சதவீத புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் நீடிக்கின்றன.