ஷேன் வார்னேவுக்கு அடுத்து... நாதன் லயன் படைத்த புதிய சாதனை
நாதன் லயன் 600 விக்கெட் மைல்கல்: ஷேன் வார்னேவுக்கு அடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை கடந்த 2வது ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளராக நாதன் லயன் வரலாறு படைத்தார்; வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் 3 விக்கெட்டுகள், 32 ரன்கள், ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் வெற்றிக்கு முக்கிய பங்கு. Nathan Lyon 600 wickets record: Australian off-spinner becomes second after Shane Warne to cross 600 international wickets, taking 3 wickets vs Bangladesh and scoring 32 runs as Australia clinch an innings victory.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். ஷேன் வார்னேவுக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 32 ரன்கள் எடுத்ததோடு, 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி லயன் அசத்தினார். இவரது சிறப்பான பங்களிப்பால் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.