PulseNews
விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் ஆட்டம்: சாய் சுதர்சனுக்கு பதில் சர்பராஸ் கான் அணியில்..?

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 02 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் வரும் 15-ஆம் தேதி காலி மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரரான இடது கை ஆட்டக்காரர் சாய்சுதர்சன் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு வலது கால் பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் உடற்தகுதியை பொறுத்தே இலங்கை தொடருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சாய் சுதர்சனுக்கு உடல் ரீதியாக குணமடைதலுக்கு கூடுதல் அவகாசம் அளிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் பாதுகாப்பாகத் திரும்புவதற்குத் தேவையான அளவுக்கு அது இன்னும் முழுமையடையவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு மாற்றுவீரராக சர்ப்ராஸ்கான், ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷீத் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சர்ப்ராஸ்கான் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் ஆட்டம்: சாய் சுதர்சனுக்கு பதில் சர்பராஸ் கான் அணியில்..?
PulseNews சுருக்கம்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் பங்கேற்கவிருந்த தமிழக வீரர் சாய் சுதர்சன், வலது கால் பெருவிரல் எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தாலும், முழுமையான குணமடைய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் அவர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

இதனால் சாய் சுதர்சனுக்கு மாற்று வீரராக சர்பராஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ஷேக் ரஷீத் ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்ய அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இவர்களில் சர்பராஸ் கான் அணியில் இடம் பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 15-ஆம் தேதி காலி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports