PulseNews
விளையாட்டு

கோல்ஃப் போட்டியில் களமிறங்கும் 'சென்னை லயன்ஸ்'... ஆனா, ஆட்டம் மட்டும் சொந்த மண்ணில் இல்ல? காரணம் என்ன?

கோல்ஃப் உலகில் புதிய அணியாக களமிறங்கியுள்ள விம்த்ரா சென்னை லயன்ஸ் கோல்ஃப் கிளப், சென்னையின் கோல்ஃப் பாரம்பரியத்தையும் விளையாட்டு கலாசாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தனது அணியை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இதையொட்டி, சென்னை டிஎன்ஜிஎஃப் காஸ்மோ கோல்ஃப் கிளப்பில் பிரத்யேக சந்திப்பு மற்றும் கோல்ஃப் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 48 கோல்ஃப் வீரர்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள், கோல்ஃப் ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். காலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோல்ஃப் விளையாட்டு, கலந்துரையாடல் மற்றும் புதிய அணியின் அறிமுகம் ஆகியவை முக்கிய அம்சங்களாக அமைந்தன. விம்த்ரா வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் உருவாகியுள்ள விம்த்ரா சென்னை லயன்ஸ் கோல்ஃப் கிளப், அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுபாஷ் யம்மடா, நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திம்மாஜி ராவ் யம்மடா ஆகியோரின் தலைமையில் செயல்படுகிறது. வளர்ந்து வரும் ஏஎம் கிரீன் இந்தியன் கோல்ஃப் பிரீமியர் லீக் தொடரின் ஒரு பகுதியாக இந்த அணி உருவாகியுள்ளது. இதன் மூலம் தனிநபர் விளையாட்டாக மட்டுமின்றி, அணிகளுக்கு இடையிலான போட்டி, ரசிகர்களின் ஆதரவு மற்றும் நகரத்தின் பெருமை ஆகியவற்றுடன் தொழில்முறை கோல்ஃப் விளையாட்டை மக்களிடம் மேலும் நெருக்கமாக கொண்டு செல்ல முடியும் என அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. டிஎன்ஜிஎஃப் காஸ்மோ கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக விம்த்ரா சென்னை லயன்ஸ் அணியின் வீரர்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டனர். இந்திய கோல்ஃப் துறையில் திறமையை வெளிப்படுத்தியுள்ள ககன்ஜீத் புல்லர், யாஷ் சந்திரா, எம்.எஸ். சமர்த் திவேதி மற்றும் ஹர்ஷ்ஜீத் சிங் சேத்தி உள்ளிட்ட வீரர்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளனர். தொழில்முறை வீரர்களுடன் அமெச்சூர் கோல்ஃப் வீரர்கள் இணைந்து விளையாடும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையேயான நேரடி தொடர்பை ஏற்படுத்துவதோடு, தொழில்முறை கோல்ஃப் விளையாட்டின் அனுபவத்தை பொதுமக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவதும் நோக்கமாக இருந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு அணியின் வீரர்களுடன் நேரடியாக உரையாடவும், அவர்களுடன் இணைந்து கோல்ஃப் விளையாடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் தொழில்முறை வீரர்களின் அனுபவங்களை அறிந்து கொள்ளவும், கோல்ஃப் விளையாட்டின் நுணுக்கங்கள் குறித்து கலந்துரையாடவும் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, தொழில்முறை மற்றும் அமெச்சூர் வீரர்களை ஒரே தளத்தில் இணைக்கும் இந்த முயற்சி, சென்னையில் கோல்ஃப் விளையாட்டுக்கான சமூகத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அமைந்தது. சென்னையின் கோல்ஃப் அடையாளத்தை வலுப்படுத்தும் முயற்சி விம்த்ரா சென்னை லயன்ஸ் அணியின் நோக்கம் இந்தியன் கோல்ஃப் பிரீமியர் லீக் தொடரில் மட்டும் போட்டியிடுவதுடன் நின்றுவிடவில்லை. சென்னையை இந்தியாவின் முக்கியமான தொழில்முறை கோல்ஃப் மையங்களில் ஒன்றாக உருவாக்குவதற்கான நீண்டகால முயற்சியின் தொடக்கமாக இந்த அணியை நிர்வாகம் பார்க்கிறது. சென்னைக்கு ஏற்கனவே வலுவான விளையாட்டு கலாசாரம் இருப்பதுடன், பல்வேறு விளையாட்டுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது. அந்த அடித்தளத்தை பயன்படுத்தி கோல்ஃப் விளையாட்டின் ரசிகர் வட்டத்தை விரிவுபடுத்தவும், இளம் தலைமுறையினரை கோல்ஃப் பக்கம் ஈர்க்கவும் அணி திட்டமிட்டுள்ளது. அடித்தளத்திலிருந்து தொழில்முறை நிலை வரை விம்த்ரா சென்னை லயன்ஸ் அணியின் நீண்டகால திட்டங்களில் இளம் வீரர்களை அடையாளம் காண்பது, அவர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்குவது, கோல்ஃப் பயிற்சி மையங்களை உருவாக்குவது, விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திறமை இருந்தும் போதிய வாய்ப்புகள் கிடைக்காத இளம் வீரர்களுக்கு தொழில்முறை கோல்ஃப் உலகை நோக்கி முன்னேறுவதற்கான பாதையை உருவாக்குவது அணியின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடங்கி இளம் கோல்ஃப் வீரர்கள் வரை பல்வேறு வயதினரிடையே இந்த விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் பயிற்சி முகாம்கள், திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள், சமூக அளவிலான கோல்ஃப் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. விம்த்ரா வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுபாஷ் யம்மடா கூறுகையில், சென்னையில் விம்த்ரா சென்னை லயன்ஸ் அணியை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்தியன் கோல்ஃப் பிரீமியர் லீக் மூலம் இந்த பயணத்தைத் தொடங்குவது உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்தார். சென்னைக்கு வலுவான விளையாட்டு பாரம்பரியமும், அணிகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு மிகுந்த வரவேற்பும் இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதே உற்சாகத்தை கோல்ஃப் விளையாட்டிலும் உருவாக்குவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக கூறினார். ஒரு அணியை உருவாக்குவது மட்டுமே தங்களது நோக்கம் அல்ல என்றும், திறமைகளை வளர்த்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கி, இந்திய கோல்ஃப் விளையாட்டின் எதிர்காலத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் ஒரு வலுவான அமைப்பை உருவாக்குவதே தங்களது நீண்டகால இலக்கு என்றும் அவர் தெரிவித்தார். விம்த்ரா வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திம்மாஜி ராவ் யம்மடா கூறுகையில், “பெருமை, சிறப்பு, பாரம்பரியம், மரபுச்சின்னம்” ஆகிய நான்கு முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு விம்த்ரா சென்னை லயன்ஸ் அணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையின் அடையாளத்தையும் பெருமையையும் பிரதிபலிக்கும் வகையில் அணி செயல்பட வேண்டும் என்றும், தொழில்முறை வீரர்கள், அமெச்சூர் வீரர்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களை ஒரே தளத்தில் இணைக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்றும் அவர் கூறினார். இந்தியன் கோல்ஃப் பிரீமியர் லீக் தொழில்முறை அணிகளுக்கிடையிலான கோல்ஃப் போட்டியை மிகப்பெரிய ரசிகர் வட்டத்திடம் கொண்டு செல்லும் சிறந்த தளமாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் அடுத்த தலைமுறை வீரர்களுக்கான வலுவான பாதையை உருவாக்குவதே தங்களது நீண்டகால இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். பெருமை, சிறப்பு, பாரம்பரியம்... விம்த்ரா சென்னை லயன்ஸ் அணி, இந்தியன் கோல்ஃப் பிரீமியர் லீக்கில் தனித்துவமான அணியாக உருவெடுப்பதோடு மட்டுமல்லாமல், சென்னையின் விளையாட்டு அடையாளத்தையும் தேசிய கோல்ஃப் தளத்தில் பிரதிபலிக்க முயற்சிக்கிறது. தொழில்முறை போட்டிகள், ரசிகர்களுடனான தொடர்பு, அமெச்சூர் வீரர்களுக்கான வாய்ப்புகள், இளம் திறமைகளுக்கான பயிற்சி மற்றும் எதிர்கால உள்கட்டமைப்பு மேம்பாடு என பல்வேறு தளங்களில் செயல்படுவதன் மூலம் நகரத்துக்கும் கோல்ஃப் விளையாட்டுக்கும் இடையே நீண்டகால உறவை உருவாக்க அணி திட்டமிட்டுள்ளது. கோல்ஃப் விளையாட்டை சென்னையின் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்குள் மட்டும் கட்டுப்படுத்தாமல், பல்வேறு தரப்பினரும் அணுகக்கூடிய விளையாட்டாக மாற்றுவது இந்த முயற்சியின் மற்றொரு முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது. தொழில்முறை வீரர்களின் போட்டிகளை ரசிகர்கள் நேரடியாக பின்தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், உள்ளூர் வீரர்களுக்கும் முன்னணி வீரர்களுடன் பழகி கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடக்கமாக அமைந்த டிஎன்ஜிஎஃப் காஸ்மோ கோல்ஃப் கிளப் சந்திப்பு மற்றும் கோல்ஃப் நிகழ்ச்சி, விம்த்ரா சென்னை லயன்ஸ் அணிக்கும் சென்னையின் கோல்ஃப் சமூகத்திற்கும் இடையேயான முதல் முக்கிய சந்திப்பாக அமைந்தது. தொழில்முறை வீரர்களுடன் இணைந்து விளையாடிய அனுபவம், வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இடையிலான நேரடி சந்திப்பு, அணியின் எதிர்கால திட்டங்கள் குறித்த அறிமுகம் ஆகியவை நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக அமைந்தன. இதன் மூலம் சென்னையின் கோல்ஃப் களத்தில் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள விம்த்ரா சென்னை லயன்ஸ் அணி, எதிர்காலத்தில் போட்டி வெற்றிகளை மட்டுமின்றி, இளம் வீரர்களை உருவாக்குதல், கோல்ஃப் விளையாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்தல், புதிய தலைமுறையினரிடையே விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரித்தல் மற்றும் சென்னைக்கு தனித்துவமான கோல்ஃப் அடையாளத்தை உருவாக்குதல் ஆகிய இலக்குகளுடன் களமிறங்கியுள்ளது.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கோல்ஃப் போட்டியில் களமிறங்கும் 'சென்னை லயன்ஸ்'... ஆனா, ஆட்டம் மட்டும் சொந்த மண்ணில் இல்ல? காரணம் என்ன?
PulseNews சுருக்கம்

விம்த்ரா சென்னை லயன்ஸ் என்ற புதிய கோல்ஃப் அணி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையின் கோல்ஃப் விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த அணியின் தொடக்க விழா, சென்னை டிஎன்ஜிஎஃப் காஸ்மோ கோல்ஃப் கிளப்பில் நடைபெற்றது.

இந்த பிரத்யேக நிகழ்வில் 48 கோல்ஃப் வீரர்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கோல்ஃப் ஆர்வலர்கள் உள்ளிட்ட விளையாட்டு சமூகம் சார்ந்த பலர் பங்கேற்றனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports