PulseNews
விளையாட்டு

சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !

சிவகங்கை மாவட்டம் முதலமைச்சர் கோப்பை-2026 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ளோர், உரிய ஆவணங்களுடன் tncmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்திட வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

முதலமைச்சர் கோப்பை-2026

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டு தோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மண்டல மாநில அளவில் நடத்தி வருகிறது. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியானது, அனைத்து தரப்பினரையும் விளையாட்டில் ஈடுபட செய்யும் மிகச்சிறந்த முயற்சியாகும். இதன் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களை பாராட்டி, அவர்களை ஊக்குவித்து, உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை வழங்குவது, இந்த போட்டிகளில் முக்கிய நோக்குமாகும்.

இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பொதுமக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள முதலமைச்சர் விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி மாவட்ட அளவில் தொடங்கப்பட்வுள்ளது. விளையாட்டு பேட்டிகளில் பங்குகொள்ள ஆர்வமுள்ளோர் வருகின்ற 31.08.2026 வரை tncmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பவுள்ள போட்டிகளில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷீ (Wush), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீர்விளையாட்டுக்களான கயாக்யிங் (kayaking) மற்றும் கேனோயிங் (canoeing) போன்ற புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட உள்ளது.

இந்த போட்டிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் மட்டும் (01.01.2008 அன்று அல்லது அதற்குப்பின் பிறந்தவர்கள் மட்டும்), இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவியர்களும் (01.07.2001 அன்று அல்லது அதற்குப்பின் பிறந்தவர்கள் மட்டும்), 15 முதல் 35 வயது வரை உள்ள பொதுப்பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

பரிசு எவ்வளவு

மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாகரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கு கொள்ள tncmtrophy.sdat.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்திட வேண்டும். தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைப்பேசி எண்: 04575-299293 எண்ணில் வேலை நாட்களில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். “ஆடுகளம்” தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற என்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் அதிக அளவில் பங்கு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

Abp News17 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !
PulseNews சுருக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவுள்ள முதலமைச்சர் கோப்பை-2026 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள், தேவையான ஆவணங்களுடன் http://tncmtrophy.sdat.in என்ற இணையதள முகவரியில் தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports