ஷிரான் பாசிக்குடன் தொடர்புபடுத்தி போலி பிரசாரம்! சட்ட நடவடிக்கைக்கு விரைந்த திலகரத்ன டில்ஷான்
முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் டி.எம். டில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பொய்யான மற்றும் அவதூறான பதிவுகள் குறித்து கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். நாட்டிற்கு 20 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றித் தான் கட்டியெழுப்பிய நற்பெயருக்கு, இந்தத் தவறான தகவல்கள் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை திரும்பிய பின்னர் இந்த முறைப...

முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான், சமூக ஊடகங்களில் தன்னை ஷிரான் பாசிக்குடன் தொடர்புபடுத்தி பரப்பப்பட்ட அவதூறான மற்றும் பொய்யான தகவல்களுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பியதும் இந்த சட்ட நடவடிக்கையை அவர் முன்னெடுத்துள்ளார்.
இருபது ஆண்டுகளாக நாட்டிற்காக தான் அர்ப்பணிப்புடன் பணியாற்றி கட்டியெழுப்பிய நற்பெயருக்கு இந்த தவறான பிரசாரங்கள் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த முறைப்பாட்டை அவர் அளித்துள்ளார்.