PulseNews
விளையாட்டு

ஆர்மி லுக்கில் மாஸ் காட்டும் RE Classic 350 Gorkha Edition விலை, எடை எவ்வளவு? இதில் என்னெல்லாம் ஸ்பெஷல்?

Royal Enfield Classic 350-ல் ஒரு ஸ்பெஷல் எடிஷன் சமீபத்தில் அறிமுகமானது. இந்திய ராணுவத்தின் Gorkha Regiment-இன் துணிவு, ஒழுக்கத்திற்கு அடையாளமாக Classic 350 Gorkha Edition-ஐ நிறுவனம் கொண்டு வந்துள்ளது. தனித்துவமான நிறம், Gorkha Regiment அடையாளங்களுடன் இந்த பைக் சாதாரண Classic 350-ஐ விட சிறப்பாகத் தோன்றுகிறது.

1. Gorkha Edition-ல் சிறப்பு என்ன?

Gorkha Green என்ற தனித்துவமான நிறத்துடன் Classic 350 Gorkha Edition-ஐ கொண்டு வந்துள்ளனர். இது ராணுவ வாகனங்களைப் போலத் தோன்றுகிறது. பைக் சைடு பேனல்களில் இரண்டு khukri-களை குறுக்காக வைத்துள்ள சிறப்பு சின்னம் காணப்படுகிறது. இது Gorkha Regiment-இன் அதிகாரப்பூர்வ சின்னம். பெட்ரோல் டேங்க் மீது fuel cap-க்கு மேலே Gorkha Edition ஸ்டிக்கர் உள்ளது. மற்ற வடிவமைப்பு, அளவுகளில் பெரிய மாற்றங்கள் இல்லை.

2. விலை எவ்வளவு?

Royal Enfield Classic 350 Gorkha Edition விலை ரூ.2.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). சாதாரண Classic 350 விலை ரூ.1.87 லட்சம் முதல் ரூ.2.24 லட்சம் வரை உள்ளது. Commando Sand என்ற மற்றொரு color variant-மும் ரூ.2.11 லட்சம் விலைக்கே கிடைக்கிறது.

3. எஞ்சினில் மாற்றங்கள் உள்ளனவா?

இந்த சிறப்பு எடிஷனிலும் Royal Enfield J-series engine-ஐயே தொடர்ந்துள்ளனர். 2020-ல் Meteor 350-உடன் அறிமுகமான இந்த single cylinder, air cooled engine 20.2 HP power & 27 Nm torque-ஐ உற்பத்தி செய்கிறது. ஆகவே செயல்திறன் விஷயத்தில் Gorkha Edition சாதாரண Classic 350-இலிருந்து வேறுபடாது.

4. சீட் உயரம் எவ்வளவு?

Classic 350 Gorkha Edition-இன் seat height 805 millimeters. சாதாரண Classic 350-இலும் இதே seat height தான் உள்ளது. பைக் உயரம் விஷயத்திலும் சிறப்பு எடிஷனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

5. என்ன அம்சங்கள் உள்ளன?

இந்த பைக்கில் semi digital instrument cluster உள்ளது. Assist & slipper clutch கிடைக்கிறது. பயணத்தின் போது mobile-ஐ charge செய்ய Type-C USB port-மும் வழங்கப்பட்டுள்ளது. Classic 350-இன் மற்ற variants-க்கும் சமீபத்தில் இதே feature set-ஐ Royal Enfield வழங்கியுள்ளது.

6. Dual channel ABS உள்ளதா?

Gorkha Edition-ல் dual channel ABS standard-ஆக கிடைக்கிறது. Classic 350-ல் நிறத்தைப் பொறுத்து ABS-ல் வேறுபாடு உள்ளது. மொத்தம் எட்டு நிறங்களில் Reddich Red base variant-க்கு மட்டும் single channel ABS உள்ளது. Gorkha Green உட்பட மற்ற நிறங்களில் dual channel ABS கிடைக்கிறது. braking-க்காக முன்புறம் 300 millimeters disc & பின்புறம் 270 millimeters disc உள்ளன.

7. எடை எவ்வளவு?

Gorkha Edition curb weight 195 kilos. Ground clearance 170 millimeters. இந்த இரண்டு அம்சங்களிலும் சாதாரண Classic 350-உடன் எந்த மாற்றமும் இல்லை. குறைந்த எடையுள்ள Royal Enfield வேண்டுமென நினைப்பவர்களுக்கு Hunter 350 மற்றொரு option. அதன் curb weight 181 kilos. ஆனால் அதன் ground clearance 160 millimeters. தினசரி பயன்பாட்டில் இந்த 10 millimeters வித்தியாசம் பெரிய பிரச்சினையாக இருக்காது.

Classic 350 Gorkha Edition-இன் முக்கிய ஈர்ப்பு தனித்துவமான ராணுவ பின்னணி டிசைன், லுக். இதைத் தவிர எஞ்சின், செயல்திறன், அளவுகள் அனைத்தும் standard Classic 350 போலவே உள்ளன. தனித்துவமாகத் தோன்றும் RE bike வாங்க நினைப்பவர்கள் ஒருமுறை showroom-க்கு சென்று, வண்டியை நேரில் பார்த்து முடிவு செய்யலாம்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆர்மி லுக்கில் மாஸ் காட்டும் RE Classic 350 Gorkha Edition விலை, எடை எவ்வளவு? இதில் என்னெல்லாம் ஸ்பெஷல்?
PulseNews சுருக்கம்

ராயல் என்பீல்ட் நிறுவனம் தனது கிளாசிக் 350 பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தின் கோர்க்கா ரெஜிமென்ட்டின் தைரியம் மற்றும் ஒழுக்கத்தை போற்றும் வகையில், கோர்க்கா கிரீன் என்ற பிரத்யேக நிறத்தில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனித்துவமான நிறம் மற்றும் கோர்க்கா ரெஜிமென்ட்டின் அடையாளங்களுடன் இந்த மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. சாதாரண கிளாசிக் 350 மாடலை விட இது மிகவும் மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports