PulseNews
விளையாட்டு

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாகவும், இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராகவும் திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஜெயிலர். தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது.

அல்ல போலேலோ பாடல் ரிலீஸ்:

இந்த நிலையில், ஜெயிலர் 2ம் பாகத்தின் பாடல் இன்று வெளியாகியுள்ளது. அல்ல போலேலோ என்ற இந்த படம் மாலை 6 மணிக்கு வெளியாகியது. இந்த பாடலின் ப்ரோமோ ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த நிலையில், தற்போது இந்த பாடல் வெளியாகியுள்ளது.

பூர்ணா அசத்தல் நடனம்:

இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை முதலாம் பாகத்தை இயக்கிய நெல்சனே இயக்குகிறார். இந்த பாடலை 2 மணி நேரத்திற்குள் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அல்ல போலோலே பாடலில் நடிகை பூர்ணா நடனமாடியுள்ளார். ஜெயிலர் படத்தில் தமன்னா காவாலா பாடலுக்கு நடனமாடியிருப்பது போல இந்த படத்தில் பூர்ணா நடனமாடியுள்ளார்.

இவர் ஏற்கனவே மகேஷ்பாபு நடித்த குண்டூர் காரம் படத்தில் குர்ச்சி மாடதபெட்டி பாடலுக்கு நடனமாடியிருப்பார். அந்த பாடலில் சிறிய நேரம் ஆடியிருந்தாலும் பூர்ணாவின் நடனம் ஸ்ரீலீலாவின் நடனத்திற்கு நிகராக புகழ்பெற்றிருந்தது. இந்த நிலையில், இந்த பாடலில் பூர்ணா முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி நடனமாடியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் ஜானி நடன வடிவமைப்பு செய்துள்ளார்.

நட்சத்திர பட்டாளம்:

ஜெயிலர் முதலாம் பாகத்தின் தாெடர்ச்சியாக இந்த படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்ஜே சூர்யா, மிதுன் சக்கரபோர்த்தி,
வித்யா பாலன், சுராஜ் ஆகியோருடன் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஹ்ரித்திக் ரோஷன், ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் 15ம் தேதி உலகெங்கும் வெளியாகியுள்ளது.

சிலை கடத்தலை மையமாக கொண்டு முதல் பாகம் உருவாகிய நிலையில், இதன் இரண்டாம் பாகத்தையும் மிகவும் சுவாரஸ்யமாக திரைக்கதையை நெல்சன் வடிவமைத்துள்ளதாக திரையுலகில் பேசப்படுகிறது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
PulseNews சுருக்கம்

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஜெயிலர். இதன் தொடர்ச்சியாக தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் 'அல்ல போலேலோ' எனும் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports