PulseNews
விளையாட்டு

சக வீராங்கனையுடன் தகாத உறவு: முன்னாள் மனைவிக்கு பதிலடி கொடுத்த ஆஸ்திரேலிய வாரியம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஆஷ்லே கார்ட்னர். இவர் 2018, 2020, 2023, 2026 ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய டி20 அணியிலும், நியூசிலாந்தில் 2022 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற ஒருநாள் அணியிலும் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில், இவர் கடந்த 2020-ல் மோனிகா ரைட் உடன் பழக ஆரம்பித்து, 2024-ல் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் தொடர்ந்து, 2025-ல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், நவம்பர் 2025-ல் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு காரணம், ஆஷ்லே கார்ட்னர் சக வீராங்கனை ஜார்ஜியா ஹோல் (22 வயது) உடன் உறவில் இருப்பதகாக் கூறப்படுகிறது. இதனை மோனிகா ரைட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தி இருந்தார். இதுபற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஜார்ஜியா ஹோல் புகைப்படத்தைப் பகிர்ந்து, “எனது மனைவி என்னை ஏமாற்றக் காரணம் இவர்தான்" எனக் கூறியிருந்தார். முன்பாக, டெய்லி மெய்ல் என்ற ஊடகத்தில் ஆஷ்லே கார்ட்னர் தன்னுடைய திருமண மோதிரத்தை கழற்றிவிட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதனைப் பகிர்ந்த மோனிகா ரைட், “இது சரியாக இல்லை. என்ன நடந்தது என்று நான் முழுமையாகக் கூறுகிறேன்" எனக் கூறி ஜார்ஜியா வோல் பதிவையும் கூறியிருந்தார். இதுவரை ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியோ வோல் இதற்கு மறுப்போ விளக்கமோ அளிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. மோனிகாவும் கார்ட்னரும் குழந்தைப் பெறவிருந்ததும் பின்னர் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சாடல் இந்த நிலையில், ஆஸ்திரேலிய துணை கேப்டன் ஆஷ்லே கார்ட்னரின் பிரிந்து வாழும் மனைவி மோனிகா ரைட், சக வீராங்கனை ஜார்ஜியா வோல் உடன் இருப்பதாகக் கூறப்படும் தொடர்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை (சி.ஏ) கடுமையாகச் சாடினார். இதுபற்றி 'கோட் ஸ்போர்ட்ஸ்' (Code Sports) ஊடகத்திடம் மோனிகா ரைட் பேசும் போது, "உங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் ஒரு முன்மாதிரியாகத் திகழும் வாய்ப்பைப் பெற்றிருந்தால், உயர்ந்த தார்மீக நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இது குறித்து ஏன் பொதுவெளியில் எதுவும் தெரிவிக்கவில்லை என்பதுதான் எனக்குப் புரியவில்லை. அவர்களின் மௌனம், ஆஷ்லே மற்றும் ஜார்ஜியா ஆகியோரின் செயல்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று பொருள்படுகிறதா? குறிப்பாக அதிகார நிலையில் தெளிவான ஏற்றத்தாழ்வு இருக்கும்போது, ​​ஒரு ஜூனியர் ஊழியருடன் தகாத உறவு வைத்துக்கொண்டு, அதே சமயம் தலைமைப் பதவியிலும் தொடர்ந்து நீடிக்க முடியாது. அணிக்கான முன்மாதிரியாகத் திகழ வேண்டியவர்கள் கேப்டன்கள்; ஆனால், அத்தகைய நடத்தை அந்தத் தரநிலைக்கு மிகவும் குறைவானதாகவே உள்ளது." என்று கூறியுள்ளார். பதிலடி இந்த நிலையில், மோனிகா ரைட்டின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அந்தச் சம்பவத்தை "தனிப்பட்ட மற்றும் அந்தரங்கமான" ஒன்றாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளது. இது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் பணியாளர்களிடையே உள்ள அனைத்து உறவுகளும், பணியிடத்தில் மரியாதை என்ற எங்கள் கொள்கைக்கு இணங்குவதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி செய்கிறது. தலைமைப் பொறுப்புகளை ஆதரிப்பதற்கும், குழுச் செயல்முறைகளின் நேர்மையைப் பேணுவதற்கும், பொருத்தமான நல முரண்பாட்டு மேலாண்மை ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதும் இதில் அடங்கும்," என்று கூறியுள்ளது. ஆதரவு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் போல், மகளிர் பிக் பாஷ் லீக் தொடருக்கான அணியான 'சிட்னி சிக்ஸர்ஸ்' (Sydney Sixers) ஆஷ்லே கார்ட்னருக்கு உறுதியான ஆதரவை அளித்துள்ளது. இதுபற்றி அந்த அணியின் பொது மேலாளரும் முன்னாள் ஆஸ்திரேலிய வீராங்கனையுமான ரேச்சல் ஹெய்ன்ஸ் பேசுகையில், "நான் ஆஷ்லே-வின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது அது போன்ற விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிக்கப் போவதில்லை. ஆனால் நிச்சயமாக நாங்கள் மெஜேஜ் மூலம் தொடர்புகொண்டுள்ளோம். நான் அவரிடம் நலம் விசாரித்தேன். அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். எங்கள் அணியில் அவர் மிகவும் மதிக்கப்படும் மற்றும் முக்கியமான ஒரு வீராங்கனை. எனவே, நாங்கள் அவருடன் இருக்கிறோம் என்பதையும், அவர் மீது அக்கறை கொண்டுள்ளோம் என்பதையும், தொடர்ந்து அவருடன் இணைந்து செயல்பட ஆவலாக இருக்கிறோம் என்பதையும் அவர் அறிந்துகொள்வதே மிக முக்கியம் என்று நான் கருதுகிறேன்." என்று கூறியுள்ளார். எட்டு இறுதிப் போட்டிகளில் ஏழு பட்டங்களை வென்று, டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா ஏற்கனவே கொண்டிருந்த சிறப்பான சாதனையை மேலும் வலுப்படுத்திய அந்த வெற்றிகரமான அணியில் ஆஷ்லே கார்ட்னரும் சமீபத்தில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The Indian Express20 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சக வீராங்கனையுடன் தகாத உறவு: முன்னாள் மனைவிக்கு பதிலடி கொடுத்த ஆஸ்திரேலிய வாரியம்
PulseNews சுருக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஆஷ்லே கார்ட்னர், தனது மனைவி மோனிகா ரைட்டைப் பிரிந்த நிலையில், சக வீராங்கனை ஜார்ஜியா ஹோல் என்பவருடன் உறவில் இருப்பதாக மோனிகா குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மெளனம் காப்பதாக மோனிகா விமர்சித்த நிலையில், இது தங்களின் தனிப்பட்ட விஷயம் என்று வாரியம் பதிலளித்துள்ளது.

பணியிடத்தில் மரியாதை மற்றும் நல முரண்பாடு மேலாண்மை கொள்கைகளின்படி தங்களின் நடவடிக்கைகள் இருப்பதாகவும், தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடப் போவதில்லை என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஆஷ்லே கார்ட்னர் விளையாடும் சிட்னி சிக்ஸர்ஸ் அணி அவருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports