டெஸ்ட் தரவரிசையில் 6-வது இடத்திற்கு தாவிய வங்காளதேசம்... பின்னுக்கு சென்ற 3 முன்னணி அணிகள்
வங்காளதேச டெஸ்ட் தரவரிசை சாதனை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 1-1 என சமன் செய்து, 78 ரேட்டிங் புள்ளிகளுடன் முதல்முறையாக 6-வது இடத்தை அடைந்த வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை அணிகளை பின்னுக்கு தள்ளி வரலாறு படைத்துள்ளது. Bangladesh Test ranking milestone: After drawing the Australia series 1-1, Bangladesh climbs to 6th with 78 rating points, overtaking West Indies, Pakistan and Sri Lanka in ICC Test rankings.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்ததன் மூலம், வங்காளதேச அணி ஐசிசி தரவரிசையில் 78 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெஸ்ட் தரவரிசையில் அந்த அணி எட்டும் மிகச்சிறந்த இடமாக இது கருதப்படுகிறது.
இந்த வரலாற்றுச் சாதனையின் மூலம் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளை பின்னுக்குத் தள்ளி வங்காளதேசம் முன்னேற்றம் கண்டுள்ளது. தரவரிசையில் முதன்முறையாக வங்காளதேசம் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.