PulseNews
விளையாட்டு

சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!

சிவகங்கை மாவட்டம் கோ-கோ விளையாட்டு வீரர், வீராங்கணைகளுக்கு பயிற்சி அளித்திட தகுதியுடைய பயிற்சியாளர், வருகின்ற 21.08.2026 அன்று நடைபெறும் நேர்முக தேர்வில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல்.

கோ-கோ பயிற்சி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா (Khelo India) திட்ட நிதியுதவியில் துவக்க நிலை கோ-கோ பயிற்சிக்கான SDAT – விளையாடு இந்தியா மாவட்ட மையம் சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டு உள்ளது. இம்மையத்தில் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கணைகளுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட கோ-கோ வீரர், வீராங்கணை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். விண்ணப்பதாரர் குறைந்நதது ஐந்து ஆண்டுகளாகவும் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

வேலை வாய்ப்போ சலுகையோ நிரந்த பணியோ கோர இயலாது.

சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். மேலும், தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.25000 வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலை வாய்ப்போ சலுகையோ நிரந்த பணியோ கோர இயலாது.

விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு 21.08.2026 அன்று காலை 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. உடற்தகுதி விளையாட்டுத்திறன் பெற்ற பதக்கங்கள் பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்பைடையில் தேர்வு நடைபெறும். எனவே, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் வருகின்ற 21.08.2026 அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் நேர்முக தேர்வில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.
Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!
PulseNews சுருக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விளையாடு இந்தியா (Khelo India) திட்டத்தின் கீழ், கோ-கோ விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சியாளர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வு வரும் ஆகஸ்ட் 21, 2026 அன்று நடைபெற உள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் நேர்காணலில் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports