IND vs SL Live Score, 1st Test: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறுள்ளது. இதில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே நகரில் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங் இந்த நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல். ராகுல் ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றி வருகிறார்கள் இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல் வருமாறு: இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், மானவ் சுதர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா. இலங்கை: லஹிரு உதாரா, நிஷான் பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), கேஷர நுவந்த, பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. காலி நகரில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
தற்போது இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.