IND vs SL: இந்தியா – இலங்கை 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்.. யாருக்கு வாய்ப்பு? பிளேயிங் லெவன் விவரம் இதோ!
IND vs SL 2nd Test Possible Playing 11: கொழும்பில் உள்ள பிட்ச், பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் ஆதிக்கம் செலுத்த சம வாய்ப்பை வழங்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இலங்கை பிட்ச்களில் இரண்டாம் நாளுக்குப் பிறகு சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் வரலாறு உண்டு.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. கொழும்பு மைதானத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இரு தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இலங்கை மைதானங்களில் போட்டிகளின் இரண்டாம் நாளுக்குப் பிறகு சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இரு அணிகளின் பிளேயிங் லெவனில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.