PulseNews
விளையாட்டு

தனியார் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பங்கேற்பு

சென்னையை அடுத்த ஆவடி அருகே வீராபுரத்தில் வேல் டெக் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டார். ((அவருடன் கிரிக்கெட் வர்ணணையாளர் முத்துவும் கலந்து கொண்டார்.)) அப்போது, நடிகர் சூர்யாவின் பாடலான முன்பே வா, முன்பே வா பாடலை பாடி அவர் அசத்தினார். ஆட்டம், பாட்டம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து நடிகர்களின் செய்கையை செய்து காட்டினர். அப்போது, சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் செய்தது போன்று செய்து காட்டி சுரேஷ் ரெய்னா அசத்தினார்.

Polimer News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தனியார் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பங்கேற்பு
PulseNews சுருக்கம்

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள வீராபுரம் வேல் டெக் பல்கலைக்கழகத்தில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, நடிகர் சூர்யாவின் 'முன்பே வா' பாடலை சுரேஷ் ரெய்னா பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். மேலும், மாணவர்கள் மேடையில் நடனம் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தியதுடன், தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் பாவனைகளைச் செய்து காட்டி மகிழ்ந்தனர்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports