தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. கோவையில் கணக்கெடுப்பில் இறங்கிய அதிகாரிகள்.. விரைவில் தங்க மழை!
Thaimaman Thanga Mothiram Scheme : கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் புதிதாக பிறந்த குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதற்கட்டமாக, மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் விவரங்களைச் சேகரிக்கும் பணி அதிகாரிகளால் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, தகுதியுள்ள குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இப்பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதால், விரைவில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.