டெஸ்ட் கிரிக்கெட்டின் சாதனை வரலாற்றில் புதிய இடத்தில் ஸ்டார்க்
அவுஸ்திரேலியா கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். பங்களாதேஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டார்வினில் நடைபெற்று வரும் நிலையில், அணியின் தொடக்க வீரர் ஷாட்மான் இஸ்லாமை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுள்ளார். போட்டி தொடங்குவதற்கு முன்பு, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத...

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். டார்வினில் பங்களாதேஷுக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், ஷாட்மான் இஸ்லாமை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் அவர் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் இந்தச் சாதனையைத் தன்வசம் வைத்திருந்தார். தற்போது அவரைப் பின்னுக்குத் தள்ளி ஸ்டார்க் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.