பாகிஸ்தான் பிரதமருக்கு 21 முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் கோரிக்கை ..!
இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும்படி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபுக்கு கபில்தேவ், கவாஸ்கர் உள்ளிட்ட பல நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன்கள் 21 பேர் வலியுறுத்தியுள்ளனர். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, இம்ரான் கானுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இம்ரான் கானை அவரது குடும்பத்தினர் வாரந்தோறும் சந்திக்க மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் காரணங்களுக்காக அல்லாமல், இம்ரான் கானுடன் விளையாட்டுக் களத்தில் தங்களுக்கு இருந்த நட்புறவின் அடிப்படையில் இந்தக் கோரிக்கையை விடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 73 வயதான இம்ரான் கான், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பிற்கு, கபில் தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இம்ரான் கானுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கவும், மனிதாபிமான அடிப்படையில் அவரது குடும்பத்தினர் வாரந்தோறும் அவரைச் சந்திக்க அனுமதிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் மனிதநேய அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.