IND vs SL: கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை.. சிக்ஸர் மழை பொழிந்த சிராஜ்.. இந்திய அணிக்கு கிடைத்த வெற்றி!
Siraj Batting: கொழும்பில் இலங்கை XI அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் 3வது மற்றும் இறுதி நாளில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் பின்தங்கியிருந்த இந்தியா, வெற்றி பெற 207 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சுப்மன் கில்லும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

கொழும்பில் நடைபெற்ற இலங்கை லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் இறுதி நாளில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் பின்தங்கியிருந்த இந்திய அணி, வெற்றி பெறுவதற்காக 207 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.
வெற்றியை நோக்கி ஆடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்து, 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிராஜ் சிக்ஸர்கள் விளாசி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.