PulseNews
விளையாட்டு

மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்!

நடிகர் அஜித் குமார் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அதில் பல்வேறு விபத்துகளையும் சந்தித்து வருகிறார். ஆனால் அதில் நல்வாய்ப்பாக அவருக்கு பெரிதாக எந்தவித காயமும் ஏற்படுவதில்லை. இந்த நிலையில் தற்போது ​ஐரோப்​பா​வில் நடை​பெற்று வரும் மிச்​சலின் லீ மேன்ஸ் கோப்​பைக்​கான போட்​டி​யில் பங்​கேற்​றுள்​ளார். இந்த போட்டி கார் ஓடும் திறன், வேகம், நீண்ட நேரம் இயங்கும் திறன் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட அவர் விபத்தில் சிக்கினார். அவர் ஓட்டிய கார் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து மூன்று முறை சுழன்று டிராக்கின் ஓரமாக ஒரு இடத்தில் நின்றது. இதனால் பின்னாடி வந்த கார்கள் அஜித் கார்மீது அதிர்ஷ்டவசமாக மோதாமல் சென்றது. இந்த விபத்தில் காரின் முன்​பகுதி சேதமடைந்​தது. அஜித் காயமின்றி உயிர் தப்பினார். இருப்பினும் இது அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திரைப்படங்களை பொறுத்தவரை அவரது ரேஸ் தொடர்பான ஆவணப்படம் ‘கிளாடியேட்​டர்​ஸ்’ அக்டோபர் மாதம் வெளியாகிறது. இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்!
PulseNews சுருக்கம்

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கார் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் அஜித் குமார், பல்வேறு விபத்துகளைச் சந்தித்து வந்தாலும் அதிர்ஷ்டவசமாக பெரிய காயங்கள் இன்றி தப்பித்து வருகிறார். தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தில் அவர் பங்கேற்றார்.

வாகனத்தின் வேகம், ஓட்டும் திறன் மற்றும் நீண்ட நேரம் இயங்கும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பந்தயத்தில் பங்கேற்றபோது, அஜித் குமார் மீண்டும் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports