சர்வதேச கராத்தே போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்காக களமிறங்கும் யாழ் வீரர்
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த் அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்கு தெரிவாகி, இன்று புதன்கிழமை தாய்லாந்தில் ஆரம்பமாகவுள்ள நான்கு நாள் சர்வதேச கராத்தே போட்டியில் தேசிய அணியின் சார்பில் பங்கேற்கவுள்ளார். சென்.ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியையும் தொடர்ந்த இவர், மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார். ...

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்காகத் தேர்வாகியுள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வரும் இவர், இன்று புதன்கிழமை தாய்லாந்தில் தொடங்கும் நான்கு நாள் சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியைச் சென்.ஜோன்ஸ் கல்லூரியிலும், உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றவர். பின்னர் மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை இவர் நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.