PulseNews
விளையாட்டு

வைட் பாலுக்கு காலால் உதை: இலங்கை மைதானத்தில் கால்பந்து விளையாடிய ரிஷப் பண்ட் - வைரல் வீடியோ!

இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, வைட் பாலை காலால் உதைத்து ரிஷப் பண்ட் கால்பந்து விளையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் வருகிற 15-ஆம் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் வருகிற 23-ஆம் தேதியும் தொடங்குகின்றன. டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் வகையில், இலங்கை கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது. கொழும்பில் உள்ள என்.சி.சி. மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தின் 3-வது நாள் போட்டியின்போது, இலங்கையின் சுழற்பந்து வீச்சாளரான திலும் சதீரா தொடர்ந்து வைட் பந்துகளாக வீசினார். இதனால், பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அடிக்க முடியாதபடி பந்துகள் வைடாக வீசப்பட்டதால் ரன் எதுவும் எடுக்க முடியவில்லை. Rishab Pant is playing Football instead of Cricket😭 May be Uttrakhand President doesn't seems to Give land free for pant😂😂 pic.twitter.com/L7DIrCthvK — BEAST (@BEASTKLR) August 9, 2026 ஒரு கட்டத்தில் இதனால் எரிச்சலடைந்த பண்ட், லெக் ஸ்டம்ப் நோக்கி வைடாக வந்த பந்து ஒன்றை, தன்னுடைய காலால் உதைத்துத் தொலைவில் போகும்படி செய்தார். பின்னர் பந்துவீச்சாளர் சதீராவைப் பார்த்து பண்ட் லேசாகப் புன்முறுவலும் செய்தார். இந்த நகைச்சுவையான காட்சிகள் வீடியோவாக வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இப்போட்டியில், தொடக்கத்தில் 20 பந்துகள் வரை ரன் எதுவும் எடுக்காத பண்ட், பின்னர் 3 சிக்சர்களைப் பறக்கவிட்டு பந்துவீச்சாளருக்கு அதிர்ச்சி அளித்தார். போட்டியின் முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வைட் பாலுக்கு காலால் உதை: இலங்கை மைதானத்தில் கால்பந்து விளையாடிய ரிஷப் பண்ட் - வைரல் வீடியோ!
PulseNews சுருக்கம்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. கொழும்பு என்.சி.சி. மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் மூன்றாவது நாளில், பந்துவீச்சாளர் திலும் சதீரா தொடர்ந்து 'வைட்' பந்துகளை வீசியதால் ரிஷப் பண்ட் ரன் எடுக்க முடியாமல் சிரமப்பட்டார்.

இதனால் அதிருப்தியடைந்த பண்ட், லெக் ஸ்டம்ப் நோக்கி வந்த வைட் பந்தை தனது காலால் உதைத்துத் தள்ளினார். இந்த நகைச்சுவையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்னர் அதே போட்டியில் பண்ட் 3 சிக்சர்களை விளாசி, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports