விருதுநகர் நவீன உடற்பயிற்சி கூடத்தின் புதிய கட்டணம் அறிவிப்பு.. மாணவர்களுக்கு 50% தள்ளுபடி!

மாவட்ட விளையாட்டரங்கத்தில் செயல்பட்டு வரும் ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி கூடத்திற்கான உறுப்பினர் சந்தா கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

நவீனமயமாக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் செயல்பட்டு வரும் உடற்பயிற்சி கூடமானது தற்போது நவீனமயமாக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையமாக மாற்றி அமைக்கப்பட்டு 30.08.2025 அன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. அனைத்து வயதினரின் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் மேம்படுத்திடும் நோக்கத்துடன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முலம் மேம்படுத்தப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உறுப்பினர் சந்தா கட்டண விவரங்கள் தலைமையலுவலகத்தினால் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

சந்தா கட்டணம் 1 மாதத்திற்கான தவணை முறை கட்டணமாக மாற்றம்

அதன்படி, 01.09.2026-இல் இருந்து உறுப்பினர் சந்தா கட்டணம் 1 மாதத்திற்கான தவணை முறை கட்டணமாக ரூ.525-, 3 மாதங்களுக்கான தவணை முறை கட்டணமாக ரூ.1260-, 6 மாதங்களுக்கான கட்டணமாக ரூ.2310-, 1 வருடத்திற்கான கட்டணமாக ரூ.4410-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட பயிற்சியாளரைக் கொண்டு உடற்பயிற்சி கூடமானது செயல்பட்டு வருகின்றது. மேலும், நவீன உடற்பயிற்சி கூடத்தினைப் பயன்படுத்தும் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள கட்டணத்தொகையில் 50% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இயங்கி வரும் ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி கூடம், தற்போது நவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட மையமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான புதிய உறுப்பினர் சந்தா கட்டண விவரங்களை மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா அறிவித்துள்ளார்.
இந்த மேம்படுத்தப்பட்ட உடற்பயிற்சி மையத்தில் சேரும் மாணவர்களுக்கு உறுப்பினர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.