250 பந்துகள்... 9 பவுண்டரிகள்... சிக்சர் இல்லாமலேயே சதமடித்த திலக் வர்மா!
துலீப் டிரோபி கிரிக்கெட் செய்தி: 250 பந்துகளில் 9 பவுண்டரிகள் மட்டுமே அடித்து, சிக்சர் இல்லாமலேயே சதமடித்து தெற்கு மண்டலத்தை முன்னிலையில் நிறுத்திய கேப்டன் திலக் வர்மா ரசிகர்களை கவர்ந்தார். Duleep Trophy cricket news: South Zone captain Tilak Varma scores an unbeaten 116 off 250 balls with 9 fours and no sixes, putting his team ahead after North Zone were bowled out for 195.

துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியில், தெற்கு மண்டல அணியின் கேப்டன் திலக் வர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்துள்ளார். இவர் 250 பந்துகளை எதிர்கொண்டு, ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 9 பவுண்டரிகளை மட்டும் பயன்படுத்தி ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் குவித்துள்ளார்.
வடக்கு மண்டல அணி தனது முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், திலக் வர்மாவின் இந்த சிறப்பான சதத்தால் தெற்கு மண்டல அணி முன்னிலை பெற்றுள்ளது. இவருடைய நிதானமான மற்றும் நேர்த்தியான பேட்டிங் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.