டிஎன்பிஎல் - கோவையை வீழ்த்தி திருப்பூர் அபார வெற்றி.. 18 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தல்
டிஎன்பிஎல் திருப்பூர் அபார வெற்றி செய்தி: அமித் சத்விக் 29 பந்துகளில் 66 ரன்கள், முகமது அலி மற்றும் மதிவண்ணன் ஆட்டமிழக்காமல் ரன்கள் சேர்த்து, 18 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து கோவை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தினர். TNPL Tiruppur big win: Amit Sathvik’s 66 off 29 balls and unbeaten knocks from Mohammed Ali & M. Madhivanan power chase of 167 in 18 overs to beat Kovai by 4 wickets.

டிஎன்பிஎல் தொடரில் நடைபெற்ற போட்டியில் கோவை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. கோவை அணி நிர்ணயித்த 167 ரன்கள் என்ற இலக்கை, திருப்பூர் அணி 18 ஓவர்களில் எட்டிப் பிடித்து அசத்தியது.
இந்த வெற்றியின் முக்கியத் தூணாக விளங்கிய அமித் சத்விக் 29 பந்துகளில் 66 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். அவருக்கு உறுதுணையாக இருந்த முகமது அலி மற்றும் மதிவண்ணன் ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.