Team India: நீக்கப்பட்ட பிறகு முதல் முறை.. பொதுவெளியில் மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்!
Suryakumar Yadav: இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டி20 கேப்டன்களில் ஒருவரான சூர்யகுமார் யாதவின் சர்வதேச டி20 கேப்டன்சி சாதனை, இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஒன்றாகும். அவரது கேப்டன்சியின் கீழ், இந்தியா மொத்தம் 52 டி20 போட்டிகளில் விளையாடியது. அவற்றில், இந்திய அணி 42 போட்டிகளில் வெற்றி பெற்று, வெறும் 8 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தது.

இந்திய டி20 அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகத் திகழ்ந்த சூர்யகுமார் யாதவ், தனது கேப்டன்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பொதுவெளியில் மனம் திறந்து பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இவரது கேப்டன்சி சாதனை மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி மொத்தம் 52 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 42 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், வெறும் 8 போட்டிகளில் மட்டுமே தோல்வியைச் சந்தித்துள்ளது.