சர்வதேச ஸ்குவாஷ் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்
புடாபெஸ்ட் ஸ்குவாஷ் ஓபன் வெற்றி: தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் அங்கேரி வீரர் பாலாஸ் பர்காசை நேர்செட்டில் வீழ்த்தி சர்வதேச ஸ்குவாஷ் ஓபன் சாம்பியன் பட்டம் வென்று, தனது 11வது பட்டத்தையும் ரூ.41 லட்சம் பரிசுத்தொகையையும் கைப்பற்றினார். Budapest Squash Open win: Tamil Nadu player Velavan Senthilkumar defeats Hungary’s Balazs Farkas in straight sets to clinch the International Squash Open title, securing his 11th career crown and ₹41 lakh prize money.

அங்கேரியில் நடைபெற்ற புடாபெஸ்ட் சர்வதேச ஸ்குவாஷ் ஓபன் போட்டியில் தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் அவர் அங்கேரி நாட்டைச் சேர்ந்த பாலாஸ் பர்காஸை நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் வேலவன் செந்தில்குமார் தனது விளையாட்டு வாழ்க்கையில் 11-வது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். மேலும், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக அவருக்கு 41 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.