PulseNews
விளையாட்டு

ஐ.பி.எல் ஆசையை வளர்த்த ஜெய்ஸ்வால்... அடுத்த பந்திலே அவுட் ஆன இலங்கை பேட்டர் - வீடியோ

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறுள்ளது. இதில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே நகரில் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய இலங்கை அணி 284 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 178 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சில் 193 ரன்கள் எடுத்து, இலங்கை அணிக்கு 372 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இதனை துரத்திய இலங்கை 206 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணியை இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று வருகிறது. அபாரமாக பந்துவீசிய மானவ் சுதார் 2 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தமாக 10 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதேபோல் சிறப்பாக மட்டையைச் சுழற்றிய தேவ்தத் படிக்கல் (167, 44) 211 ரன்கள் குவித்து ஆட்டத்தின் நாயகனாக ஜொலித்தார். தொடர்ந்து, இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 23-ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற உள்ளது. ஐ.பி.எல் ஆசையை வளர்த்த ஜெய்ஸ்வால்... அடுத்த பந்திலே அவுட் ஆன இலங்கை பேட்டர் இந்நிலையில், இந்தப் போட்டியின் 2-வது இன்னிங்சில் பேட்டிங் ஆடிய இலங்கை வீரர் நிரோஷன் டிக்வெல்லா-வை ஐ.பி.எல்-லில் ஆட கண்டிப்பாக வாய்ப்பு வாங்கி தருவதாக பேச்சுக் கொடுத்து அவரை ஆட்டமிழக்க காரணமாக அமைத்திருக்கிறார் இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 372 ரன்களை இலங்கை அணி துரத்தியது. 60-வது ஓவரின் போது, இலங்கை வீரர் நிரோஷன் டிக்வெல்லா-வுடன் பேச்சை போட்டார் 'ஸ்கொயர் லெக்' (square leg) பகுதியில் நின்றிருந்த ஜெய்ஸ்வால். இடது கை பேட்ஸ்மேனான டிக்வெல்லா-வை இந்திய பவுலிங்கை அடித்து ஆடுமாறு சொல்லி சாவல் விடுக்கிறார். ஜெய்ஸ்வால், 'என்னப்பா, முதல் இன்னிங்ஸில் நிறைய ஷாட்கள் அடிச்சீங்களே, இப்ப அது மாதிரி அடிச்சு ஆடுங்க, நாங்க பார்க்கணும்' என்பது போல் சொல்கிறார். அதற்கு டிக்வெல்லா, "ஆம்?" என்று பதிலளித்தார். பிறகு ஜெய்ஸ்வால், 'அதே போன்ற ஷாட்களை நான் அதைப் பார்க்க விரும்புகிறேன். வாங்க, எனக்கு அடிச்சு காட்டுங்க. அங்கே (டீப் ஸ்கொயர் லெக் திசையைச் சுட்டிக்காட்டி) பந்தை அடியுங்கள். ஏன் அடிக்க கூடாது? அதுலாம் அடிக்கலாம்' என்பது போல் சொல்கிறார். அதற்கு டிக்வெல்லா, "அதெல்லாம் தேவையில்லை. என்னை ஐ.பி.எல்-க்கு (IPL) அழைத்துச் செல்லுங்கள், அப்போது நான் சிக்ஸர் அடிப்பேன்," என்று பதிலளித்தார். "நிச்சயமாக அழைத்துச் செல்வோம், 100 சதவீதம். வாங்க, அவருக்கு எதிராக ஒரு சிக்ஸர் அடியுங்கள், நான் உங்களை ஐ.பி.எல்-க்கு அழைத்துச் செல்கிறேன்," என்று ஜெய்ஸ்வால் கூறுகிறார். Prasidh Krishna gets Niroshan Dickwella once again! 🔁 Watch #SLvIND , 1st Test | Day 5, LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV. #SonySportsNetwork #SonyLIV #BeautifulGameOfTestCricket pic.twitter.com/2c3J4FJWxk — Sony Sports Network (@SonySportsNetwk) August 19, 2026 அப்போது டிக்வெல்லா "நன்றி," என்று பதிலளித்தார். அவர்கள் இருவரும் இப்படி பேசிக் கொண்டிருந்த நேரத்தில், அதே ஓவரின் கடைசிப் பந்தில், டிக்வெல்லா சற்று விலகிச் சென்று 'ஆஃப் சைடு' (off side) திசையில் பந்தை அடிக்க முயன்றார்; ஆனால் பந்து அவரது பேட்டின் விளிம்பில் பட்டு எட்ஜ் ஆக, விக்கெட் கீப்பர் லாவகமாக கேட்ச் எடுத்தார். டிக்வெல்லா 10 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இப்படி பேச்சை போட்டு விக்கெட் வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து, ஜெய்ஸ்வாலை இந்திய வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஐ.பி.எல் ஆசையை வளர்த்த ஜெய்ஸ்வால்... அடுத்த பந்திலே அவுட் ஆன இலங்கை பேட்டர் - வீடியோ
PulseNews சுருக்கம்

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலே நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 462 ரன்களையும், இலங்கை அணி 284 ரன்களையும் எடுத்தன.

இதனைத் தொடர்ந்து 178 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்சில் 193 ரன்கள் சேர்த்தது. இப்போட்டியின் போது ஜெய்ஸ்வால் விளையாடிய விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், இலங்கை பேட்டர் ஒருவர் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports