Neeraj Chopra: சக்கர நாற்காலில் வந்த நீரஜ் சோப்ரா.. காயத்தால் அவதி! சோகத்தில் ரசிகர்கள்!
Neeraj Chopra on Wheelchair: நீரஜ் சோப்ரா கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கத்தையும், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், 2023ம் ஆண்டு புராபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.

கடந்த சில ஆண்டுகளாக நீரஜ் சோப்ரா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தையும், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றுள்ளார். மேலும், 2023-ம் ஆண்டு புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
தற்போது நீரஜ் சோப்ரா காயம் காரணமாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது. தடகளத்தில் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் அவர், காயத்தால் அவதிப்படுவது விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.