கொடைக்கானல் ஏரி ஆக்கிரமிப்புகள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கொடைக்கானல் ஏரி பகுதியில் தெருவோர வியாபாரிகள், தெருவோர உணவுக்கடை உரிமையாளர்கள், குதிரை சவாரி மற்றும் வாடகை மிதிவண்டி சேவை வழங்குநர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என எனக் கோரி மனு.

கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடம்

இந்தியாவிலேயே மிக அழகான மலைவாச ஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 'காடுகளின் பரிசு' என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம். கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் ஏரி பகுதியில் தெருவோர வியாபாரிகள், தெருவோர உணவுக்கடை உரிமையாளர்கள், குதிரை சவாரி மற்றும் வாடகை மிதிவண்டி சேவை வழங்குநர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என எனக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆழ்வார்திருநகர், சோமசுந்தரம் தாக்கல் செய்த மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலமான திண்டுக்கல் கொடைக்காணலுக்கு நாள்தோறும் இருந்து பல்லாரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கொடைக்கானல் ஏரி பகுதியில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஏரி பகுதியில் தெருவோர வியாபாரிகள், தெருவோர உணவுக்கடை உரிமையாளர்கள், குதிரை சவாரி மற்றும் வாடகை மிதிவண்டி சேவை வழங்குநர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனதில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன்,சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் மனு குறித்து கொடைக்கானல் நகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தன ர்.
Source: Read Full Article
கொடைக்கானல் ஏரிப் பகுதியில் சாலையோர வியாபாரிகள், உணவுக்கடை உரிமையாளர்கள், குதிரை சவாரி மற்றும் வாடகை மிதிவண்டி சேவை வழங்குநர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், இந்தியாவின் மிக அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். கோடைகாலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இந்த முக்கிய சுற்றுலாத் தலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.