Women’s Asia Cup 2026: மகளிர் ஆசிய கோப்பை இன்று தொடக்கம்.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது?
Women's Asia Cup 2026 India Schedule: 2026 மகளிர் ஆசியக் கோப்பையில் 8 அணிகள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குழு A-வில் ஹாங்காங், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகளும், குழு B-யில் நடப்புச் சாம்பியனான இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. குழு சுற்றுக்குப் பிறகு, நாக்-அவுட் சுற்று தொடங்கும்.

2026-ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் தலா 4 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
குழு ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் மற்றும் தாய்லாந்து அணிகளும், குழு பி-யில் இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா மற்றும் வங்கதேசம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. குழு சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த பிறகு, நாக்-அவுட் சுற்றுகள் நடைபெற உள்ளன.