மகளிர் சாம்பியன்ஸ் டிராபி... இந்தியாவில் நடக்கிறதா?... இலங்கையிடம் இருந்து பறிக்கப்படுகிறதா வாய்ப்பு?
மகளிர் சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவுக்கு வருமா?: 2027 மகளிர் சாம்பியன்ஸ் டிராபி நடத்தும் உரிமையை இலங்கை இழக்கும் சூழல், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு வாய்ப்பை அதிகரிக்கிறது. ICC நிர்வாகக் குழு அக்டோபர் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்க உள்ள நிலையில், தொடரை நடத்தும் உரிமையும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் இலங்கை அணியின் பங்கேற்பும் கேள்விக்குறியாகியுள்ளது. | Women’s Champions Trophy host shift: Sri Lanka faces loss of hosting rights for 2027 Women’s Champions Trophy, with India emerging as a strong alternative host. Final decision at ICC October board meeting may also impact Sri Lanka’s qualification, as only top-6 ranked teams gain direct entry.

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் இத்தொடரை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இத்தொடரை நடத்தும் உரிமையுடன், தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இலங்கை அணி பங்கேற்பதும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.