IND vs SL: வெற்றியுடன் தொடங்கிய சுப்மன் படை.. இந்திய அணி படைத்த 3 முக்கிய சாதனைகள்!
India vs Sri Lanka 1st Test Records: இந்தியாவுக்காக வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 7வது சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை மானவ் சுதார் பெற்றிருந்தாலும், அவர் இந்தச் சாதனையை மிக இளம் வயதிலேயே நிகழ்த்தியுள்ளார். மானவ் சுதாருக்கு முன்பு, ரவிச்சந்திரன் அஸ்வின் (இருமுறை), பிஷன் சிங் பேடி, எரப்பள்ளி பிரசன்னா, பகவத் சந்திரசேகர், அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார், வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மிக இளம் வயதிலேயே இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு ரவிச்சந்திரன் அஸ்வின், பிஷன் சிங் பேடி, எரப்பள்ளி பிரசன்னா, பகவத் சந்திரசேகர், அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இச்சாதனையைச் செய்துள்ளனர்.