IND vs SL 2nd Test Day2 Highlights: படிக்கல், துருவ் அதிரடி சதம்... 503 ரன்களை குவித்து இந்தியா டிக்ளர்; மழை குறுக்கீடு
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறுள்ளது. இதில், காலே நகரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1 - 0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தலைநகர் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங் இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல். ராகுல் ஜோடி களமிறங்கிய நிலையில், இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 45 ரன்னுக்கும், கே.எல். ராகுல் 18 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களத்தில் இருந்த தேவ்தத் படிக்கல் அரை சதம் விளாசி அசத்தினார். அவர் 168 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் சதம் விளாசியும் மிரட்டினார். இந்தத் தொடரில் அவர் விளாசும் 2-வது சதம் இதுவாகும். இதேபோல், சிறப்பாக ஆடி வந்த கேப்டன் சுப்மான் கில் அரை சதம் விளாசினார். அவர் 108 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்திருந்தபோது, நிரோஷனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 3 ரன்கள் எடுத்தபோது ரிட்டையர்ட் ஹர்ட் ஆகினார். பின்னர் ரவீந்திர ஜடேஜாவுடன் படிக்கல் ஜோடி அமைத்து மட்டையைச் சுழற்றி வந்தார். அவர் 193 பந்துகளில் 12 பவுண்டரிகளை விரட்டி 117 ரன்கள் எடுத்தபோது, நுவந்தவின் பந்து வீச்சில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். இதேபோல், ஜடேஜா 43 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். துருவ் ஜூரெல் 7 ரன்னுடனும், சரண்ஷ் ஜெயின் 4 ரன்னுடனும் களத்தில் இருக்க, முதல் நாள் ஆட்ட நேர முடியில், 85 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 300 ரன்கள் எடுத்தது. இலங்கையின் அசித பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும், லஹிரு குமரா ஒரு விக்கெட்டும், கேஷரா நுவந்த ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், சரண்ஷ் ஜெயின், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா. இலங்கை: லஹிரு உதாரா, கமில் மிஷார, பசிந்து சூரியபண்டார, கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), கேஷர நுவந்த, பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலே நகரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
தற்போது கொழும்பில் நடைபெற்று வரும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், படிக்கல் மற்றும் துருவ் ஆகியோரின் அதிரடி சதங்களின் உதவியுடன் இந்தியா 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இப்போட்டியில் மழை குறுக்கிட்டது குறிப்பிடத்தக்கது.