டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: மதுரை - கோவை அணிகள் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதி: முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், இருமுறை சாம்பியன் கோவை கிங்ஸ் இன்று சேப்பாக்கத்தில் மோதல்; ரூ.20 லட்சம் சாம்பியன் பரிசு, ரூ.10 லட்சம் ரன்னர்-அப் பரிசு, சோனி ஸ்போர்ட்ஸ் தமிழ் 4 நேரடி ஒளிபரப்பு. TNPL final cricket match: Former champions Madurai Panthers face two-time winners Kovai Kings at Chepauk tonight with ₹20 lakh for champions, ₹10 lakh for runners-up and live telecast on Sony Sports Tamil 4.

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் முன்னாள் சாம்பியனான மதுரை பாந்தர்ஸ் அணியும், இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற கோவை கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 20 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 10 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த இறுதிப்போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் தமிழ் 4 தொலைக்காட்சியில் ரசிகர்கள் நேரடியாகக் காணலாம்.